கயானாவின் மிக உயரிய தேசிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் முகமது இர்பான் அலி!
Mar 15, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கயானாவின் மிக உயரிய தேசிய விருது – பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் முகமது இர்பான் அலி!

Murugesan M by Murugesan M
Nov 21, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர்  நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான “ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்” விருதை வழங்கினார்.

பிரதமரின் தொலைநோக்கு ராஜதந்திரம், உலக அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளை வென்றெடுத்தல், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை, இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தக் கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியா-கயானா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு தமது அரசுமுறைப் பயணம் ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.

கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதைப் பெறும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு அதிபர் சில்வானி பர்ட்டனா கவுரவித்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கயானாவில் நடந்த உச்சிமாநாட்டின் போது, டொமினிகாவின் அதிபர் சில்வானி பர்ட்டனா, பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதை வழங்கினார்.

Tags: prime minister narendra modiDr. Mohammed Irfan AliPresident of GuyanaGuyana's highest national awardaward to modi
ShareTweetSendShare
Previous Post

ஆடு திருட வந்தவர் என நினைத்து விரட்டிய மக்கள் – அச்சத்தில் 250 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி அமர்ந்த நபரால் பரபரப்பு !

Next Post

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கண்டனம்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies