காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறினால் சமுதாயம் தன் அழிவை மிக விரைவில் சந்திக்க நேரிடும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மரப்பாலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ‘காக்கி உடை வீரர்கள்’ என்ற தலைப்பில் காவலர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், காவலர்களின் செயலும், பணியும் உன்னதமானது என தெரிவித்தார். கொரோனா அச்சுறுத்தல் காலத்தின்போது காவலர்களின் பணி போற்றத்தக்கது என்று கூறிய அவர், காவலர்கள் எப்போதும் நேர்மையோடு, பாராபட்சம் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.