கடலூரில் ஷூவுக்குள் இருந்த 2 அடி நீள சாரைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
கடலூர் கோண்டூர் பகுதியில் உள்ள வீட்டில் சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. வீட்டிலிருந்த ஷூவுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு சென்ற செல்வா என்ற பாம்புபிடி வீரர், ஷூவுக்குள் இருந்த 2 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.