2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐபிஎல் தொடர்களுக்கான தேதிகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25ம் தேதி முடிவடையும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் 2026ம் ஆண்டு மார்ச் 15 முதல் மே 31ம் தேதி வரையும், 2027ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி முதல் மே 30ம் தேதி வரையும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மேலும் 2025 மற்றும் 26ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் 84 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், 2027ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் 94 போட்டிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.