நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. நாகப்பட்டினம் நகரம், வெளிப்பாளையம், நாகூர், புத்தூர், காடம்பாடி மற்றும் அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக, சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.