மக்கள் சேவை என்பதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின் கீழ் 200 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை வகித்து பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பாஜக-வை பொருத்தவரை கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் அவர்களையும் சேர்த்தே அரசாங்கத்தை நடத்துவதாகக் கூறினார். மக்கள் சேவை என்பதுதான் பாஜகவின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்தார்.