மதுரையில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
கடந்த 21-ஆம் தேதி உலக தமிழ் சங்கத்தின் 43-வது உலக கவிஞர்கள் மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கவிஞர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற அவர்கள், கவிக்காடு என்ற தலைப்பில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.