அரியலூரில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஊர்க்காவல் படை வீரரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த இசைக் கலைஞரின் வாய்பேச முடியாத மனைவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான சிவசண்முகம், இசைக் கலைஞரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது வாய் பேச முடியாத மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் சிவசண்முகம் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் ஊர்க்காவல் படை வீரரான சிவசண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.