திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மாணவனை தாக்கிய விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாபட்டி கிராமத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜெகன் என்பவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் மாடியில் உள்ள வகுப்பறையை மாணவன் சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது தவறுதலாக துடைப்பம் குச்சிகள் தலைமை ஆசிரியர் சந்திரமோகனின் கார் மீது விழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஜெகனை சரமாரியாக தாக்கியதில் மாணவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோர் புகாரளித்த நிலையில் சந்திரமோகனை போலீசார் கைது செய்தனர்.