கரூர் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மேற்கு பிரதட்சணம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு அனுமதி பெற்ற பாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அப்போது பாரில் இருந்து வெளியே வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சத்தம் போட்டுக்கொண்டே ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த மகளிர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தன்னிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை நபர் ஒருவர் பறித்து சென்றதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து அவரை காவல்நிலையம் அழைத்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.