ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வினாடிக்கு 4,100 கன அடி வீதம் நீர்வரத்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஆரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 55 கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு அறிவுறுத்தியுள்ளார்.