ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில், ஹெச்.ஐ.வி. பாதித்தோரின் சூழலை புரிந்து கொண்டு, அவர்களுக்கான மனித உரிமைகளை அனைவரும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஜெ.பி.நட்டா, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரை மனிதாபிமான முறையில் அணுக வேண்டுமென கேட்டுக்கொண்டார்.