சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிராமப்புற பெண்களிடம் சைபர் க்ரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரைக்குடியில் சைபர் க்ரைம் காவல்துறை சார்பாக, கிராமப்புற பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி கல்லூரி சாலையில் உள்ள ஆரியபவனில் இருந்து துவங்கி பழனியப்பன் அரங்கம் வரை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, சைபர் கிரைம் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்று பெண்களுக்கு போலீசார் எடுத்து கூறினர். மேலும், தங்கள் தொலைபேசிக்கு வரும் ஓடிபி எண்களை தெரியாத நபர்களுக்கு பகிரக்கூடாது, முறைப்படுத்தப்படாத வங்கிகளில் இருந்து கடன் பெறுவதாக செல்போனுக்கு வரும் லிங்குகளை பயன்படுத்தக் கூடாது, ஆன்லைனில் வேலை உள்ளது என்று கூறி பணம் கேட்டால் கட்டக்கூடாது என பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.