சேலத்தில் உள்ள திருமணிமுத்தாறு ராஜ வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளும் நீரில் அடித்துச்செல்லப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்த நிலையில், திருமணிமுத்தாற்றில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தற்காலிகமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளும் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், 50 ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், ராஜவாய்க்கால் அருகே கான்க்ரீட் சுவர் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.