தஞ்சாவூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை வட்டாட்சியர் பிடிக்க முற்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் நில ஆய்வுக்கு சென்றுவிட்டு அலுவலகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரியில் மணல் ஏற்றிச்சென்ற நபர்கள் அதிகாரிகள் லாரியை பிடிக்க வருவதாக கருதியுள்ளனர்.
தொடர்ந்து லாரி மூலம் அதிகாரிகள் வந்த வாகனத்தில் அவர்கள் மோத முயன்றுள்ளனர். இதில் நூலிழையில் உயிர்தப்பிய வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், 20 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று லாரியை மடக்கிப்பிடித்தனர்.
லாரியில் இருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், லாரியை கைப்பற்றிய அதிகாரிகள் அதனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.