ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியில் இருந்து 39 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இந்நிலையில் நீர்வரத்து சற்று குறைந்து தற்போது 35 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.