கனமழை காரணமாக வாழப்பாடி அடுத்த ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலத்தில் பெய்த கனமழையால், ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்ட நதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து, வசிஷ்டர் நதியின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் நெய்யமலை, கிழக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
ஆகவே, தரைப்பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.