தமிழ் தெரியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு பட்டாசு ஆலைகளில் பணி வழங்கக்கூடாது என, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பட்டாசு உற்பத்தி உள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தி வருகின்றன.
இந்நிலையில், பட்டாசு தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.