கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் சொம்பில் தலை விட்டு பூனை சிக்கிக்கொண்டது 2 மணிநேர போராட்டத்திற்கு பின் சொம்பு அகற்றப்பட்டது.
சரவணா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது வீட்டுக்கு சென்ற சொம்பில் உள்ள பாலை குடிக்க முயன்றுள்ளது. அப்போது பூனையின் தலையில் பால் சொம்பு சிக்கிக்கொண்டது. எத்தனை முயன்றும் செம்பை அகற்ற முடியாமல் போகவே, கால்நடை மருத்துவரிடம் பூனை அழைத்து செல்லப்பட்டது.
அங்கு பூனைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு, சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பூனையின் தலையில் சிக்கிய சொம்பு அகற்றப்பட்டது.