சர்வதேச கிரிக்கெட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல போவதாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா உறுதியளித்தார்.
பிசிசிஐ செயலராக இருந்த அவர், அண்மையில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்துக்கு முதன்முறையாக சென்ற ஜெய் ஷா, அதன் நிர்வாக இயக்குநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
,இதனிடையே ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மாற்றமின்றி முதலிடத்திலும் தொடர்கின்றார்.