முதலமைச்சர் தொடங்கி வைத்த அத்திக்கடவு அவிநாசி திட்டம் சோதனை ஓட்டத்திலேயே இருப்பதால், 60 ஆண்டு கால கனவு திட்டம் கானல் நீராகவே உள்ளதாக அன்னூர் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தரிசு
நிலங்கள் பயனடையும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள், அதிமுக ஆட்சி காலத்தில் 80 சதவீதம் முடிக்கப்பட்டன.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் முடிவுற்றதாக கூறி முதலமைச்சர் ஸ்டாலின், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால், குளம் குட்டைகளுக்கு சோதனை அடிப்படையில் குழாய்களில் தண்ணீர் விடப்பட்ட நிலையே தற்போதும் தொடர்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இணைக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.