தாம்பரம் அடுத்த முடிச்சூர் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னையிலிருந்து வெளியூருக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நின்று செல்ல வசதியாக, சுமார் 42 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் கட்டப்பட்டு வந்தது.
பணிகள் நிறைவடைந்த நிலையில், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தப்படியே முதலமைச்சர் ஸ்டாலின், காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், கோயம்பேடு சந்தையில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தையும் அவர் நிகழ்ச்சியின்போது திறந்து வைத்தார்.