சிக்கிய வியட்நாம் பெண் தொழிலதிபர் : உலகின் மிகப்பெரிய வங்கி மோசடி - சிறப்பு தொகுப்பு!
Aug 19, 2025, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிய வியட்நாம் பெண் தொழிலதிபர் : உலகின் மிகப்பெரிய வங்கி மோசடி – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வியட்நாமில் 22,885 கோடி ரூபாய் வங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. உலகின் மிகப்பெரிய வங்கி மோசடி இதுவாகும் . யார் இந்த பெண் தொழில் அதிபர் ? அவரின் பின்னணி என்ன? எப்படி இவ்வளவு பெரிய வங்கி மோசடியைத் திட்டமிட்டு செயல்படுத்தினார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

68 வயதான (Truong My Lan) ட்ருங் மை லான் என்ற பெண் தொழில் அதிபர், வியட்நாமில் 22,885 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்திருக்கிறார். வியட்நாமில் உள்ள ‘ஹோ சி மின்’ என்ற சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ட்ருங் மை லான், தனது தாயார் நடத்திய தேநீர் கடையில் அம்மாவுக்கு உதவி செய்து வந்தார். பிறகு தனது இளமை காலத்தில், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

1980களின் முற்பகுதி வரை, வியட்நாமில், தனியார் நிறுவனங்கள் நிலம் வாங்க முடியாது. 1986 ஆம் ஆண்டில், பதவிக்கு வந்த புதிய அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, தனியார் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கவும் விற்கவும் அரசு அனுமதி அளித்தது. இதன் விளைவாக, தனியார் நிறுவனங்களுக்கு பல வங்கிகள் நிலம் வாங்க அதிக அளவில் கடன்களை வழங்கத் தொடங்கின. இதனை அடுத்து வியட்நாமில் ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ச்சியடைந்தது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பெரிய தொகை கடன்களைப் பெற வங்கிகளுக்கு லஞ்சம் கொடுத்தனர். கடன் பெற்று நிலங்களை வாங்கி குவித்தனர். பிறகு அதிக விலைக்கு வாங்கிய நிலங்களை விற்று பெரும் லாபம் பார்த்தனர்.

அதில் (Truong My Lan) ட்ருங் மை லானும் ஒருவர். ‘Van Thinh Phat, ‘வான் தின் பாட்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கினார். இதனால், 1990களில் ட்ருங் மை லான் அபரிமிதமான செல்வத்தைச் சம்பாதித்தார்.

வங்கிகளுக்கு அதிக வட்டியும் மற்றும் அதிக லஞ்சமும் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே தொழிலில் குறைந்த அளவே லாபம் கிடைத்தது. தனக்கு சொந்தமாக ஒரு வங்கி இருந்தால், லஞ்சம் கொடுக்கவோ, அதிக வட்டி கொடுக்கவோ, தேவை இல்லை என்று லான் யோசித்தார்.

உடனே, மூன்று சிறிய வங்கிகளை வாங்கினார். அவற்றை ஒன்றாக இணைத்து, 2012 ஆம் ஆண்டில், (Sai Gon Joint Stock Commercial Bank (SCB) சாய் கோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை லான் உருவாக்கினார். இந்த வங்கியை நம்பி, மக்கள் அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்யத் தொடங்கினர்.

லானின் வங்கியில் அதிகமான பணம் குவிந்த வண்ணம் இருந்தன. இந்த வங்கி, நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியானது. வியட்நாமில் பிரபலமான பணக்கார பெண் தொழில்முனைவோர்களில் ஒருவராக லான் அறியப்பட்டார்.

எந்தவொரு தனி நபரும் ஒரு வங்கியில் 5 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதை வியட்நாம் நாட்டு சட்டம் அனுமதிக்காது. இந்த உச்ச வரம்பு சட்டம், தான் விரும்பிய அளவுக்குப் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் லானை தடுத்தது.

இதிலிருந்து விடுபட லான் பல போலி ஷெல் நிறுவனங்களை உருவாக்கினார். நூற்றுக்கணக்கான இந்த ஷெல் நிறுவனங்கள் மூலம், ட்ரூங் மை லான் கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை தன் வசம் வைத்திருந்தார்.

Sai Gon Joint Stock Commercial வங்கியில் மக்கள் வைத்திருந்த வைப்புத் தொகை பணத்தை, லான் தனது ஷெல் நிறுவனங்களுக்கு பெரும் கடன்களை வாரி வழங்கத் தொடங்கினார். இப்படி, தனது பினாமி ஷெல் நிறுவனங்களுக்கு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக லான் வழங்கினார். அதிலிருந்து சுமார் 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரும்பப் பெற்றார்.

2019 ஆம் ஆண்டு, வியட்நாம் அரசு, ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியது. வணிகம் மற்றும் அரசு துறையில் உள்ள ஊழல்வாதிகளை குறிவைத்து “எரியும் உலை” என்ற பிரச்சாரம் நடத்தப்பட்டது. நாட்டில் எந்த வகையான ஊழலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவும், கடுமையாக தண்டனை கொடுக்கவும் அரசு வழிவகை செய்தது.

இந்த சுழலில், Sai Gon Joint Stock Commercial வங்கியின் முன்னாள் ஊழியர்கள் சிலர், லான் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து ஷெல் நிறுவனங்களுக்கு அனுப்புவதாக செய்தியைப் பரப்பினர். இந்த தகவல் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வைரலானது.

Sai Gon Joint Stock Commercial வங்கியின் மீது நம்பிக்கை இழந்து மக்கள் டெபாசிட் செய்த பணத்தைத் திரும்ப கேட்டனர். முதலில் வந்த சிலருக்குப் பணம் திரும்பக் கொடுக்கப் பட்டது. பின்னர், வங்கி திவாலாகி விட்டதாக கூறப்பட்டது.

இந்த முறைகேடு அம்பலமானதும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. லானின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. லானின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

44 பில்லியன் அமெரிக்க டாலர்களில் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களில் மீட்கப்பட்டன. ஆனால் சுமார் இன்னும் 27 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் காணவில்லை. இது நாட்டின் கடந்த ஆண்டு ஜிடிபியில் 6 சதவீதமாகும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

வங்கி மோசடியை மறைக்க லான், வங்கி அதிகாரிகளுக்கு 5.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் கொடுத்து உள்ளார். வியட்நாம் வரலாற்றில், இந்தளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.

விசாரணைக்குப் பின் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி லான் கைது செய்யப்பட்டார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பத்திரங்களை வழங்கியதாக லான் மீது குற்றம் சாட்டப்பட்டது. 12.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான 916 போலி கடன் பத்திரங்களை விற்றதாகவும் குற்றம் சாட்டப் பட்டது.

உலகிலேயே பெரிய வங்கி மோசடி செய்த குற்றத்துக்காக 68 வயதான லானுக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி,. ஹோசிமின் நகர மக்கள் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப் பட்டது.

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி நீதிமன்றத்தில் லான் மேல்முறையீடு செய்திருந்தார். லானுக்கு வழங்கப்பட்ட தண்டணையைக் குறைக்க எந்தக் கரிசனமும் இல்லை என தெரிவித்த நீதிமன்றம், லானின் மனுவை தள்ளுபடி செய்தது. எனவே லானுக்கு மரண தண்டனை உறுதியாகியுள்ளது.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட லானின் கணவர் மற்றும் லானின் மருமகள் உட்பட 85 பேர்களுக்கும் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. வியட்நாம் சட்டப்படி மோசடித் தொகையில் 75 சதவீத தொகையை திருப்பி அளித்தால் மரண தண்டனை குறைக்கப்படும்.

இதனையடுத்து அரசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய 9 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டும் வேலையில் லானின் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். லானின் வங்கி மோசடி, வியட்நாம் நாட்டு நிதித் துறையில் உள்ள நிர்வாக குறைபாடுகளை அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது.

Tags: vietnamworld's largest bank fraud.Truong My Landefrauded 22885 crore
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு – கிராம மக்கள் போராட்டம்!

Next Post

புஷ்பா’னா ‘BRAND’ : வசூலை குவிக்கும் இரண்டாம் பாகம் – சிறப்பு தொகுப்பு!

Related News

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies