தெலங்கானா மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் பள்ளி சுவற்றின் இடுக்கில் மாட்டிக் கொண்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
புலிஜாலா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மாணவியின் தலை இரண்டு சுவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், சுவற்றை சிறிதாக உடைத்து சிறுமியை மீட்டனர்.