சென்னையில் கவிஞர் தங்கராசாவின் எழுத்தில் காவியமாக மாற்றப்பட்ட சிரேணிகன் சரிதம் என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.
சென்னை தியாகராய நகரில் சமணத் தமிழ்ச் சங்கம் சார்பில், வர்த்தமான மகாவீரர் காலத்தில் வாழ்ந்த பேரரசன் சிரேணிகனின் சரிதம், கவிஞர் தங்கராசாவின் எழுத்தில் காவியமாக மாற்றப்பட்டு நூல் வெளியிடப்பட்டது.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி தலைமை விருந்தினராக பங்கேற்று நூலை வெளியிட்டார். மேலும், நூலில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும், தன்னை கவர்ந்த வரிகள் குறித்தும் நீதியரசர் பேசினார். விழாவில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் பங்கேற்றனர்.