ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தச்சு பெருமாள்பாளையத்தை சேர்ந்த ரேணுகா என்பவர் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தபோது, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் வந்த இருவர் தாக்கியுள்ளனர்.
பின்னர் ரேணுகா அணிந்திருந்த அரை சவரன் தங்க தோடை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசாரின் வாகன சோதனையின் போது ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து திருட்டில் ஈடுபட்ட மோகன், மூர்த்தி ஆகியோர் சிக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.