நாகையில் வாகன சோதனையின்போது கத்தியால் கையை கிழித்துக்கொண்டு மதுபோதையில் போலீசாரிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கீழ்வேளூர் அடுத்த வடக்காளத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மாரிமுத்து மது அருந்தி இருப்பதும், உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் சென்றதும் தெரியவந்தது.
போலீசாரிடம் சிக்கியதால் அதிர்ச்சியடைந்த இளைஞர், கத்தியால் கையை கிழித்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது ரத்தத்தை தெளித்தார். பின்னர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் இளைஞரை பிடித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.