16-வது ஈஷா கிராமோத்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
கோவை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். நெல்லையில் நடைபெற்ற போட்டிகளை, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். போட்டிகளில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். இறுதியாக போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.