சென்னை அடுத்த மணலியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
மணலி பெரிய தோப்பு பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் 54ம் ஆண்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வை ஒட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து வீதி உலா நிறைவுபெற்ற உடன் ஆயிரக்கணக்கான பெண்கள் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.