ஹிமாசல பிரதேசத்தில் பனிப்பொழிவு தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சிம்லாவில் குளிர் காலத்தையொட்டி பனிப்பொழிவு தொடங்கியதால், திரும்பும் திசையெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சீசன் களைகட்டியதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பனிப்பொழிவால் வீடுகளின் மேற்கூரையில் பனிக்கட்டிகள் கொட்டிக் கிடந்தன. இதை மலைப்பகுதியில் இருந்தவாறு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.