புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆய்வை முடித்து மத்திய குழு அதிகாரிகள் புதுச்சேரி சென்றடைந்தனர். தொடர்ந்து முதல் நாளில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ராஜேஷ் குப்தா தலைமையிலான அதிகாரிகள், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து 2ம் நாளில் கதிர்காமம், கோரிமேடு, வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.