திருப்பூரில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
பீகாரை சேர்ந்த அங்கஸ்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வீட்டிலிருந்த அவரது ஆண் குழந்தை, வாளியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதை பார்த்த பெற்றோர் குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.