கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்து அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு பயணிகள் வரும் கதவு மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேட்டரி வாகனத்தில் வரும் பயணிகளை நேரடியாக ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்தில் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் இறக்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவதாக கூறி அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















