திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவியை ஹெல்மெட் அணிந்து வந்து கணவர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவினாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சரண்யா என்ற பெண்ணை, அவரது கணவர் ரமேஷ் ஹெல்மெட் அணிந்து வந்து வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவர் ரமேஷ் காவல்நிலையத்தில் சரணடைந்தார். தற்போது இது குறித்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.