கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துளளார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், எஸ்.எம்.கிருஷ்ணா பொதுமக்களின் நலனுக்காக ஆற்றிய சேவை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக என்றும் நினைவுகூரப்படுவார் என கூறியுள்ளார். அவரது ஆன்மா இறைவனின் பாதங்களை அடையட்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.