பாரதியார் பிறந்த நாள் - மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, எல்.முருகன் வாழ்த்து!
Aug 16, 2025, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாரதியார் பிறந்த நாள் – மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, எல்.முருகன் வாழ்த்து!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாகவி பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமித் ஷா விடுத்துள்ள பதிவில், நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான மஹாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்கள் பிறந்த தினத்தில் அவருக்கு எனது வீர வணக்கம்.

பாரதி  தனது பிரகாசமான ஞானத்தால் நமது சுதந்திர போராட்டத்தின் வேட்கையை ஒளிரச் செய்து, தமிழ் சமூகத்தை அதன் உண்மையான சுய தன்மைக்கு மாற்ற பெரும்பாடுபட்டவர். அவரது இலட்சியங்கள் நமக்கு நித்ய மூலமாக இருந்து என்றென்றும் ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா விடுத்துள்ள பதிவில், “மஹாகவி பாரதியார்” என்று போற்றப்படும் பழம்பெரும் தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதிக்கு அவரது பிறந்த தினத்தில் என் அஞ்சலி.

அவரது உணர்வு மிக்க கவிதைகள் எப்போதும் தேசபக்தி உணர்வுகளைத் தூண்டக்கூடியவை, சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக அவரது கருத்துக்கள் இன்றும் நம்மை வழிநடத்துகின்றன. அவரது அடிச்சுவடுகளை நாம் பின்பற்றும்போது, ​​பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமை, பெண்களுக்கான உரிமைகளில் கவனம் செலுத்தியது, நம் சிறந்த கவிஞருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள செய்தில், “பாரத தேசமென்று பெயர்சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.”

நமது பாரத தேசத்தின் பெருமைமிகு விடுதலைப் போராட்ட வீரரான ‘முண்டாசுக் கவிஞன்’ சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

தனது தேசப்பக்தி மிகுந்த தமிழ்ப் பாடல்கள் மூலம், சமூகத்தில் நிலவி வந்த சாதியப் பாகுபாடுகள் களைந்திடவும், நமது ஒற்றுமை ஒன்றே சுதந்திரத்திற்கான உரிய வழி என்றறிந்து, மக்களை ஒன்றிணைப்பதிலும் பெரும்பங்காற்றியவர்.

அவரிடத்தில் இருந்த தமிழாற்றல் கொண்டு தலைச்சிறந்த தேசப்பாடல்கள் இயற்றியவர், குழந்தைகள் முதலாக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவரிடத்திலும் சுதந்திரத் தாகத்தை தீவிரமாக ஏற்படுத்தினார்.

தேச விடுதலைக்காக இடையறாது அவராற்றிய பணிகள் ஒவ்வொன்றும், எக்காலத்திற்கும் அழியாமல் அவரது புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும். அய்யா ‘மகாகவி’ சுப்ரமணிய பாரதியார்  பிறந்த தினமான இன்று அவர்களது தியாக ஆன்மாவை பெருமையுடன் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganCentral Ministers Amit ShahMahakavi Bharathiyar. birth anniversary
ShareTweetSendShare
Previous Post

இந்திய வரைபட விவகாரம் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

ஜாபர் சாதிக் ஜாமின் மனு மீது வரும் 17-ஆம் தேதி உத்தரவு – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

Related News

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies