நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்த தளபதி திரைப்படம் 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடித்து வெளியான தளபதி திரைப்படத்தை, மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் தியேட்டரில் 33 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது, ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர்கள், நாங்கள் எங்கள் பிறந்த நாளை கூட கேக் வெட்டி கொண்டாடியது இல்லை, ஆனால், கடந்த பல வருடங்களாக ரஜினிகாந்த் பிறந்த நாளை தவறாமல் கொண்டாடி வருகிறோம் என தெரிவித்தனர்.