கன்னியாகுமரி அருகே, அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை 184 -வது ஆண்டு உதயதின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த 8 -ம் தேதி அய்யனார் குளத்தில் துவங்கிய பாதயாத்திரை, தாமரைக் குளம் தாமரைப்பதியில் நிறைவடைந்தது.
இதனைத்தொடர்ந்து, புனித அகிலத்திரட்டு உதய தினவிழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, அய்யா வழி ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், புனித அகிலத்திரட்டு அம்மானை வேத நூலை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.