இன்று பிறந்த நாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசியல் பயணத்தின் ஆரம்பக் காலத்தில் இருந்தே, அவரது வலதுகரமாக, தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லவராக விளங்கியவர்.
ஆழ்ந்த அரசியல் அனுபவம் பெற்றவர். அண்ணன் தினகரன் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.