கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம் இல்லங்களில் தீப விளக்கேற்றி வழிபடுகின்ற அனைவருக்கும், எனது மனமார்ந்த கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று ஏற்றுகின்ற தீப ஒளியின் மூலம், அய்யன் அருணாச்சலேஸ்வரனின் அருளானது அனைவருக்கும் கிடைக்கப்பெற்று, நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள் அகன்று, புதிய வளங்களும் இன்பமும் பெருகிட, எல்லாம் வல்ல ஈசனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.