தென்காசி அருகே ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழை காரணமாக 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீரமட்டம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியது.
இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநதி அணை வடகால் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.