சேலத்தில் சிறை கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மொபைல் போன் சப்ளை செய்த விவகாரத்தில், வழக்கறிஞர் மற்றும் 3 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் சமீபத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தியதில், வழக்கறிஞர் முருகன் என்பவர் மூலம் கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மொபைல் போன் ஆகியவை சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, துணை ஜெயிலர் குமார் அளித்த புகாரின் பேரில், வழக்கறிஞர் முருகன், கைதிகள் அப்சல் பாட்சா, அஜித் குமார் மற்றும் சாந்தகுமார் ஆகியார் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன்மீது வழக்குபதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்த வழக்கறிஞர் முருகன் தலைமறைவாகிவிட்டார்.