பெங்களூரில் ஐ.டி. ஊழியரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் பெங்களூரில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்தார். மனைவியை பிரிந்த அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மாமியார் வீட்டில் தொல்லை கொடுத்தனர். இதனால் விரக்தியடைந்த அதுல் சுபாஷ், 25 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரது மனைவி, மாமியார் மற்றும் இரண்டு மைத்துனர்கள் என நான்கு பேரை கைது செய்தனர்.