ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர் தெலங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் தனது திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், அன்பு உங்களை அழைக்கும்போது, அதை பின்தொடருங்கள், ஏனென்றால் அன்பு தன்னைத் தவிர வேறு எதையும் கொடுக்காது எனும் கலில் ஜிப்ரானின் வரிகளையும் பதிவிட்டுள்ளார். இவர்களின் திருமணம் வரும் 22-ந்தேதி உதய்பூரில் நடைபெற உள்ளது.