திண்டுக்கல்லில் பெய்த தொடர் மழையால் விளைநிலங்களில் மழைநீர் புகுந்த நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் நெல், மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பெய்த தொடர் மழையால் சுமார் 30 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் புகுந்தது.
இதனால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நிலையில், அங்குள்ள ஓடையை தூர்வாரி உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.