திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பைரவன் குப்பம் கிராமத்தை சேர்ந்த இளங்கோ, தனக்கு சொந்தமான படகில் ஜானகிராமன், சுந்தர் ஆகியோருடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். முகத்துவாரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது.
மீன்பிடி பொருட்களை அனைத்தும் நீரில் மூழ்கிய நிலையில், பாறைகள் மீது இடித்து படகு இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.