கன்னியாகுமரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர் மீது கார் மோதிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி பாலூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டல் ஜெபி என்ற பெண் நாகர்கோவில் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
மத்திக்கோடு என்ற பகுதியில் அவர் அதிவேகமாக பயணித்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் பைக்குடன் நின்றுகொண்டிருந்த சர்வேஷ்வரன் என்பவர் மீது மீது மோதியது.
இதில் சர்வேஷ்வரனும், காரை ஓட்டி வந்த பெண்ணும் காயமடைந்த நிலையில், பதற வைக்கும் விபத்து காட்சி வெளியாகியுள்ளது.