திருநெல்வேலி மாவட்டம், காரையாறு அருகே சாலையோரத்தில் மான்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான அகஸ்தியர் அருவி, காரையாறு, சொரிமுத்தையனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்ததால், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தற்போது சாலையோரத்தில் இரை தேடி சுற்றித் திரிகின்றன. சமூக விரோதிகள் மான்களை வேட்டையாடாமல் தடுக்க வனத்துறை ரோந்துப் பணியை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.