சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மழையால் பூக்கள் வரத்து குறைந்ததாலும், மார்கழி மாதம் தொடங்கியவுடன் பூக்களின் தேவை அதிகரித்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு முன்பு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ, தற்போது ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 300 ரூபாய்க்கு விற்பனையான மூல்லைப்பூ, தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.