காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் கோயில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















